பயன்பெறுநரிடம் வழங்கப்பட்ட ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 106வது இல்லம்

#SriLanka #Home #Mullaitivu #.jeevaootru
Prasu
1 year ago
பயன்பெறுநரிடம் வழங்கப்பட்ட ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 106வது இல்லம்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது பல்வேறான மனிதநேயமிக்க பணிகளையாற்றுகின்றது.

விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் கடந்த 29.06.2024 அன்று ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 106ஆவது இல்லம் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

images/content-image/1719943249.jpg

இவ் இல்லமானது முல்லைத்தீவு தேவிபுரத்தில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி உதவியை கோவில்வயல் இயக்கச்சியை சேர்ந்த அமரத்துவமடைந்த பாலவினாயகமூர்த்தி பாலவினோதினி அவர்களின் 34 ஆவது பிறந்ததின நினைவாக பாலவினாயகமூர்த்தி பாலயோகமணி குடும்பத்தினர் வழங்கியுள்ளார்கள்.

images/content-image/1719943266.jpg

இவ் மகத்தான உதவியினை நல்கிய உறவுகளுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.

images/content-image/1719943286.jpg

images/content-image/1719943307.jpg

images/content-image/1719943322.jpg

images/content-image/1719943335.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!