100 ஒக்டேன் பெற்றோலை வெளியிடும் ஐஓசி நிறுவனம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கை ஐஓசி நிறுவனம் 100 ஒக்டேன் பெற்றோலை இன்று (02.07) சந்தைக்கு வெளியிடவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் தனது x தளத்தில் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனத்தின் தலைவர்கள் குழுவொன்று தம்மை சந்தித்து கலந்துரையாடியதாக அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை ஐஓசி எரிபொருள் நிலைய விஸ்தரிப்புத் திட்டம், மசகு எண்ணெய் சந்தை, எண்ணெய் தாங்கி வளாக அபிவிருத்தி, எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் உத்தேச இந்தியா-இலங்கை எரிபொருள் குழாய்த்திட்டம் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.