ஹட்டன் நகரில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஹட்டன், கொட்டகலை ரொசிட்டா நகரில் உள்ள குடா ஒன்றில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் இன்று (02.07) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை நகரில் வடிகால் அமைப்பில் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொட்டகலை ஊடாக பயணித்த ஒருவர் பாதுகாப்பற்ற குடாவில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலத்தை ஹட்டன் நீதவான் பரிசோதித்ததன் பின்னர் சடலம் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.



