பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் சம்பந்தனின் உடல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க விசேட உரையாற்றிய பிறகு அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களின் பூதவுடல் ஜூலை 03ஆம் திகதி இறுதி அஞ்சலிக்காக நாடாளுமன்ற வளாகத்துக்குக் கொண்டுவரப்படவுள்ளது.
அதன் காரணமாக அன்றைய தினம் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டாம் என நாடாளுமன்ற விவகாரக் குழு இணக்கம் தெரிவித்ததாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இதன்படி பிற்பகல் 2.00 மணி முதல் மறுநாள் மாலை 4.00 மணி வரை இறுதி அஞ்சலிக்காக பாராளுமன்ற கட்டிடத்தின் முகப்பு மண்டபத்தில் உள்ள வரவேற்பு மண்டபத்தில் உடல் வைக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.



