பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையை வெளியிடும் ஜனாதிபதி!

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி நாளை (02.07) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
இதன்படி நாளை நடைபெறவிருந்த பிரேரணை தொடர்பான விவாதம் அல்லது வாக்கெடுப்பை நடத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (01.07) பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இதேவேளை, அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகள் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மூன்று ஒப்பந்தங்களில் ஒன்று இன்னும் கைச்சாத்திடப்படவில்லை என்பதே காரணம் என்கிறார். தொடர்ந்து பேசிய லக்ஷ்மன் கிரியெல்ல, மூன்று ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடாமல் விவாதம் நடத்துவதில் அர்த்தமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.



