நோர்டன் பிரிட்ஜ் பகுதியில் 13 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
நோர்டன் பிரிட்ஜ் பகுதியில் 13 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர்!

நோர்டன் பிரிட்ஜ் 04 கன்வானு பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சந்தேக நபர் நேற்று (30.07) பிற்பகல் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் இதற்கு முன்னர் 9 வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்து பிரதேசத்தை விட்டு ஓடி மாவனெல்லையில் சுமார் 10 வருடங்களாக தலைமறைவாக இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த நபர்  தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்டு 05 மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கடுமையான பிணை நிபந்தனைகளுடன் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் நேற்று காலை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பொலிஸாருடன் கையொப்பமிட வந்துள்ளார்.  

பின்னர், சந்தேகநபரின் பிணையில் கையொப்பமிட்ட தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்ற அவர், அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கற்பழிக்கப்பட்ட சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், வீதித் தடைகளை பயன்படுத்தி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் பாடசாலை மாணவி திக் ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதான நோர்டன்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர். சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!