காணி உரிமைகளை பெறுபவர்கள் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டும் - ரணில்!

பாரம்பரிய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இலவச காணி உரிமைகளை பெற்றுக்கொள்ளும் அனைவரும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்டத்தில் நேற்று (30.06) இடம்பெற்ற “ஹெரிடேஜ்” தேசிய நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "இந்த நிலங்கள் சும்மா கொடுக்கப்படவில்லை. நாங்கள் பணம் கேட்கவில்லை. எங்கள் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு அனைவரும் சம்மதிக்க வேண்டும்.
விவசாயம் செய்பவர்கள். அங்கு வாருங்கள். இந்த பகுதியை மீண்டும் மேம்படுத்த உதவிகள் செய்து உதவுவோம்.
ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு செல்லுங்கள். அடுத்த 30-40 ஆண்டுகளில் ஒரு துறைமுகம் உள்ளது, அதன் மூலம் நாம் பணம் சம்பாதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.



