இலங்கைத் தமிழரசுக் கட்சி கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டு பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது !
#SriLanka
#R. Sampanthan
#Kilinochchi
Mayoorikka
1 year ago

நேற்றைய தினம் மறைந்த, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான, இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
துயரின் வெளிப்பாடாக மாவட்டப் பணிமனை முன்றலில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.



