தமிழ் மக்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர் சம்பந்தன்! சுமந்திரன்

இரா.சம்பந்தனின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு மாத்திரம் அல்ல முழு சமூகத்திற்கும் மிக மூத்த அரசியல்வாதியின் இழப்பாக தான் கருதப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் நேற்று (30) இரவு 11 மணியளவில் தனியார் மருத்துவமனையில் காலமாகியுள்ளார்.
அவர் மரணம் அடையும் போது அவருக்கு 91 வயது, நீண்ட காலம் தமிழ் மக்களுக்கு இணையில்லாத தலைவராகவும் தமிழ் மக்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர் சம்பந்தன்.
அவரது இழப்பு தமிழ் சமூகத்திற்கு மாத்திரம் அல்ல முழு சமூகத்திற்கும் மிக மூத்த அரசியல்வாதியின் இழப்பாக தான் கருதப்படுகிறது. இன்று காலை ஜனாதிபதி என்னோடு பேசினார் மற்றும் பிரதம மந்திரியும் பேசினார், சபாநாயகரும் என்னோடு பேசி இருக்கிறார் அவருடைய பூதவுடல் அஞ்சலிக்காக பாராளுமன்றத்தில் வைக்கப்பட வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள்.
Raymond House இல் நாளை (02) காலை 9 மணியில் இருந்து மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் அதன்பின்னர் புதன்கிழமை (03) மதியம் பாராளுமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கே இருந்து அன்னாரின் மாவட்டமாகிய திருகோணமலைக்கு பூதவுடல் எடுத்து செல்லப்படும்.
இறுதிக் கிரியைகள் எப்போழுது என குடும்பத்தினர் தீர்மானிக்கவில்லை என்றாலும் அநேகமாக ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கிரியைகளை வைப்பதற்கு உத்தேசித்துள்ளார்கள் என தெரிவித்தார்.



