பதில் சட்டமா அதிபர் இன்று பதவிப் பிரமாணம்!
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
1 year ago

பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
தலைமை நீதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் கடந்த 26ஆம் திகதி முடிவடைந்த நிலையில், சட்டமா அதிபர் பதவி வெற்றிடமாகவே இருந்தது.
இதன்படி, பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்கவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பாரிந்த ரணசிங்க இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஏ.பாரிந்த ரணசிங்கவின் மகன் ஆவார்.



