தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

இந்த வருடமும் அடுத்த வருடமும் பல தேர்தல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை எனவும், அதற்குத் தேவையான நிதி வசதிகள் இல்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

மாத்தறையில் இன்று (30.06) நடைபெற்ற "ஏக்வா ஜெயகமு" பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, புயலுக்கு முகங்கொடுத்த இலங்கை கப்பலை பத்திரமாக கரைக்கு கொண்டு வந்துள்ளதாகவும், தப்பியோடிய கப்டனிடம் கையளிக்கப்படுமா? அல்லது இவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுமா? மக்களை போகுமாறு கேட்டுக் கொள்கிறார்.  

"ஏகவா ஜெயகமு" என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளிக்கும் பொதுக்கூட்டம் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பல கட்சிகளின் உறுப்பினர்களுடன் நடைபெற்றது. 

அங்கு பேசிய மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவையும் வழங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!