தமிழ் அரசியல் வரலாற்றில் ஆளுமைமிக்க மூத்த தலைவர் சம்பந்தன்!

#SriLanka #R. Sampanthan #Trincomalee #Death #Tamil People
Mayoorikka
1 year ago
தமிழ் அரசியல் வரலாற்றில்   ஆளுமைமிக்க மூத்த  தலைவர் சம்பந்தன்!

பிரித்தானிய முடியின் கீழான காலனித்துவ ஆட்சியில் இலங்கை இருந்தபோது பிறந்தவர்தான் இராஜவரோதயம் சம்பந்தன். டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பிறந்தவர். இலங்கை 1948ல் சுதந்திரம் பெறும் போது அவருக்கு 15 வயது கழிய ஒரு நாள் குறைவு. 

 இவ்வாறு தமிழ் அரசியல் வரலாற்றில் முதுபெரும் மூத்த ஆரசியல்வாதிதான் சம்பந்தன்.

இவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு தனது 91 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

 இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவர் போன்றன இவருடைய பதவிகள் அடையாளங்கள். 1977 முதல் 1983 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன், சிறிய இடைவேளையின் பின்னர் 2001 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

 2015 செப்டம்பர் 3 முதல் டிசம்பர் 18 வரை இவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சம்பந்தனின் தந்தை ஏ. இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர். 

சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். லீலாதேவி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

 சம்பந்தன் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர். இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு ஜுலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர். 

மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழந்தார். 1989 நாடாளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/தமிழர்விடுதலைக்கூட்டணி போன்ற கூட்டமைப்பின் வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார்.

 கூட்டணியின் வேட்பாளர் எவரும் இம்மாவட்டத்தில் வெற்றி பெறவில்லை. 2001 ஆம் ஆண்டில் தமிழர்விடுதலைக்கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்), டெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற புதிய கூட்டணிக் கட்சி ஒன்றை ஆரம்பித்தனர். 

இக்கூட்டணிக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்கட்சி தேர்தல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாத படியால் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக 18 ஆண்டுகளின் பின்னர் சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்தில் விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்குச் சார்பாக தனது நிலைப்பாட்டினை முன்னெடுத்தது. 

இந்நிலைப்பாட்டுக்கு தமிழர்விடுதலைக்கூட்டணி தலைவர் வி. ஆனந்தசங்கரி எதிர்ப்புத் தெரிவித்து கூட்டமைப்பில் இருந்து விலகினார். அத்துடன், 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை. இதனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டனர். சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004, நாடாளுமன்றத் தேர்தல்களில் சம்பந்தன் திருகோணமலைத் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 2015 தேர்தலில் முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆகியன முறையே 106, 95 இடங்களைக் கைப்பற்றியிருந்தன. ஐதேக ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன. இதனால் 16 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2015 செப்டம்பர் 3 இல் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரு­கோ­ண­ம­லை வாழ் தமிழ் மக்­களின் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தியாக கடந்த 46 வரு­டங்­க­ளாக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டுவரும் ஒரு மூத்த தலை­வராக சம்பந்தன் பார்க்கப்படுகின்றார்.

 அதுமட்டுமல்ல சம்­பந்தன் வடக்­கு,­கி­ழக்கு தமிழ் மக்­களின் அடை­யா­ள­மாவர். அந்த அடை­யா­ளத்தை வெளி­யேற்­றினால் அவ­ரது இடத்­துக்கு வரக்­கூ­டி­ய­வர்கள் எவரும் இல்லை. தமிழ் மக்­களின் தற்­போ­தைய நிலை­மையை அறிய அவர்­களின் இது­வரை கால அவ­லங்­களை அறிய, அவர்­களில் அபி­லா­ஷை­களை அறிய வெளி­நாட்டு தூது­வர்கள் நாடும் முக்­கி­ய­நபர் சம்­பந்­தனே ஆவார்.

 1983ஆம் ஆண்டு பாராளுமன்ற ஆசனத்தை இழந்த சம்பந்தன் 1997 ஆம் ஏறத்தாழ 14 ஆண்டுகளின் பின் பாராளுமன்றம் ஏகினார். மறுபடியும் 2000ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட சம்பந்தன், 2001ஆம் ஆண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் 2004, 2010, 2015, மற்றும் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். 2015 – டிசெம்பர் 2018 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்ததன் மூலம், அந்தப் பதவியை வகித்த இரண்டாவது தமிழர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார். தனது 89 வருட வாழ்வில் 29 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார் இரா. சம்பந்தன். இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றின் முக்கிய காலகட்டங்கள், திருப்பு முனைகள் என்பவற்றை நேரடியாகப் பார்த்த, அதில் பலவற்றில் பங்காளியாக இருந்த பழுத்த அனுபவம் மிக்க தலைவர் இரா. சம்பந்தன் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 

அதுபோலவே பாராளுமன்ற மரபுகளை, நடைமுறைகளை நன்கறிந்த, அனுபவம் மிக்க சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுள் இரா. சம்பந்தன் முக்கியமானவர் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவர் பாராளுமன்றத்தில் எழுந்து உரையாற்றினால், அந்த உரை பெருமளவிற்கு அமைதியாக கேட்கப்படுமளவிற்கு மதிப்பு மிக்க மனிதராகவே அவர் பார்க்கப்படுகிறார். 

அண்மைய ஆண்டுகளில் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சந்தர்ப்பங்கள் குறைவு என்றாலும், அவர் ஆற்றியிருந்த ஒரு சில உரைகள் கூட ஆழமானதாகவும், அர்த்தபுஷ்டியுள்ளவையாகவும் அமைந்திருந்தன. அவரது சில பாராளுமன்ற உரைகள், இலங்கைப் பாராளுமன்றம் கண்ட ஆகச் சிறந்த உரைகள் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும் தகைமை மிக்கவை. ஆனால் தற்போது அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதில்லை என்பது மட்டுமல்ல, பாராளுமன்றத்திற்கு செல்வது கூட மிகக் குறைவு என்பது வருத்தத்திற்குரிய விடயமாக இருக்கிறது. அண்மையில் சம்பந்தன் ஓய்வுபெற வேண்டும் என்ற கருத்து அதிகமாகப் பேசப்படும் நிலையில், “வசதிகளை அனுபவிப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காகவே அரசியலுக்கு வந்தவன் நான். 

எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதை பெறாமல் அரசியலில் இருந்து நான் விடைபெறப் போவதில்லை” என்ற பதிலை வழங்கியிருந்தார். அவரது அனுபவமும், அறிவும், அதன்பாலான ஆலோசனைகளும் தமிழர் அரசியலுக்கு தேவையான உரம். ஆனால் அவரது பங்களிப்பு அந்தளவில் அமைவதுதான் காலத்திற்கேற்றது. சம்பந்தன் அவர்களுக்கு பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துவிடும் வாய்ப்புள்ளது, அவர் ஓய்வுபெற்றால் அடுத்த தலைவர் யாரென்ற பிரச்சினை வரும் போன்றவை சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக நீடிப்பதற்கான நியாயமாக காரணங்களாக அமைகின்றன.

 தனது மிகநீண்ட அரசியல் வாழ்வில் தமிழர் அரசியலுக்கு கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ள சம்பந்தன் அவர்களின் சிறப்பை வரலாறு சொல்லும், ஆனால் அந்த வரலாற்றில் அவர் இளைஞர்களுக்கு வழிவிடாது, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தானே தன் இறுதிவரை பற்றிக்கொண்டிருந்தார் என்பது ஒரு கரும்புள்ளியாக அவர்மீது வைக்கப்படும் விமர்சனங்களாகும். 

உண்­மை­யி­லேயே பெரும் தியா­கங்­களை செய்­தி­ருக்கும் மூத்த தலைவர் சம்­பந்­தனின் ஆளு­மையும் அவ­ரது அனு­ப­வமும் மதிக்­கப்­பட வேண்­டி­ய­தொன்­றா­கவே இருந்துள்ளது. ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாததும் மறுக்க முடியாததுமான மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!