இரா . சம்பந்தன் இப்படிப்பட்டவரா? நம்ப முடியவில்லை - அஞ்சலி

#Death #Parliament #R.Sambanthan #TNA #Politician #condolence
Prasu
1 year ago
இரா . சம்பந்தன் இப்படிப்பட்டவரா? நம்ப முடியவில்லை - அஞ்சலி

ஆயிரம் புலம்பல்களுக்கு மத்தியில் விமர்சனங்களின் மேல் சவாரி செய்து முடிந்தவரை தமிழர்களின் இருப்பை தக்க வைத்தீர்கள். தீர்க்க தரிசனமாக உங்கள் தலைமையில் ஒரு பாதுகாப்பு  முனைவை அரசியல் தளபதியாக்கினார்.

அவரின் மௌனத்துக்கு பின்னர் பல வியாபாரிகளாலும் பூண்டுகளாலும் உங்களுக்கு மதுபான வெறியர்களாலும் புலி வியாபாரிகளாலும் முக நூல் பொழுதுபோக்கு விட்டில்களாலும் குறைக்கப்பட்டீர்கள்.

உங்களுக்கே தெரியும், தமிழர் உரிமை என்பது யாராலும்  எவராலும் பெறவோ கொடுக்கவோ முடியாதது.   சிங்களம் கொடுக்காத உரிமையை கொடுக்க முடியாத உரிமையை கல்வியால் மட்டும் அதுவும் மும்மொழி கல்வியால் மட்டுமே  பெற முடியும் என்பதால் உங்கள் கட்சியில் நீங்கள் விரும்பி சில படித்தவர்களை இணைத்தீர்கள்.

images/content-image/1719787647.jpg

அவர்கள் ஊடாக மும்மொழிக்  கல்வியை ஊக்குவித்தீர்கள். சிலரின் தீபாவளி  நக்கல் நையாண்டிகளைத் தாண்டி உங்கள் முயல்வு தொடர்ந்தது.  தொடரவேண்டும். 

ஆயுதத்தால் இவ்வுலகை வெல்ல முடியாது என நினைத்துதான் மறைமுகமாக பல இளைஞர்களை உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் மும் மொழியோடு கூடிய  கல்வியை ஊட்ட பல இளைஞர்கள் யுவதிகளை அனுப்பி ஊக்குவித்தார். 

அவர்களில் பலர் சுவிற்சர்லாந்திலும்  பிற நாடுகளிலும் இலங்கையிலும் பன்மொழியறிவுடையவர்களாக வாழ்கிறார்கள்.

ஆம் உங்கள் மும்மொழி கற்றல்  இடை தரகர்கள் அதுவும் அரசியல்வாதிகள் இல்லாமல் எம் தொடர்புகளை உலகம் பரவ ஏற்படுத்த நீங்கள் கொண்ட மறைமுக முயல்வை இனி யார் தொடர்வாரோ? ஏக்கம் நிறைந்த கேள்வி இது?

images/content-image/1719787667.jpg

உங்கள் அரசியல் தாண்டி எமது கொள்கையும் மும் மொழி அறிவின் ஊடாக நாம் எமது உரிமையை அடைய ஒவ்வொருத்தரும் முன்வரவேண்டும். ஆளும் கட்சியோ எதிக்கட்சியோ ஒற்றுமை இல்லாத தமிழ் இஸ்லாமிய சிங்கள அரசியல்வாதிகளாலோ எம் வருங்கால சந்ததிக்கு  எவ்வித பிரயோசனமும் இல்லை.

ஆம் உங்களின் கல்வியால் அதுவும் மும் மொழி கல்வியால்  தமிழ் இளைஞர்கள் வெளி நாடுகளுக்கு சென்று சனத் தொகை குறையும்பொழுது தீர்க்க தரிசனமாக மும் மொழி கல்வியை ஊக்குவித்ததற்கு மிக்க நன்றி.

முடிந்தவரை நீங்கள் செய்த மக்கள் சேவைக்கும். பழைமை வாய்ந்த தமிழரசு கட்சி உடையாமல் பாதுகாத்து விட்டுச் செல்வதர்க்கும் நன்றிகள். உங்கள் ஆத்மா சாந்தியில் அமரட்டும்.

உங்கள் நித்திய தூக்கத்துக்கு ஆண்டவன் அனுமதி கொடுத்ததற்க்கு ஆண்டவனுக்கு நன்றிகள். பிறப்பு துக்கமானது. இறப்பு கொண்டாடவேண்டியது. இதை மனிதன் உணரும்பொழுதுதான் மனிதம் வாழும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!