600 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

20 இலட்சம் சொத்தான காணி உறுதிகளை வழங்கும் "உறுமய" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் தகுதியான 41,960 பேரில் 600 பேருக்கு காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெல்லவாய மகிந்த ராஜபக்ச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “உறுமய" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகூடிய காணி உறுதிப் பத்திரங்களைக் கொண்ட பிரதேச செயலகப் பிரிவில் குளங்களை புனரமைப்பதற்காக மேலதிக ஒதுக்கீடாக 25 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக கூறியுள்ளார்.



