ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியின் மாபெரும் பேரணி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணி நாட்டின் அடுத்த ஜனாதிபதியை உருவாக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வெல்லவாயில் நேற்று (29.06) இடம்பெற்ற புதிய கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் புதிய கூட்டணியின் பிரதிநிதிகள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.



