ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
நேற்று (29.06) மாலை 06.30 மணியளவில் பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தபால் புகையிரதம் கலபடை மற்றும் இங்குருஓயா புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் அந்த வழியாக செல்லும் ரயில் தடைபட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு குறுகிய தூர ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது தண்டவாளத்தை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.