ஜுலை 17 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகும்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி தேர்தல் திகதியை ஆணையம் அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்டியில் இன்று (29.06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், தேர்தல் ஆணையம் எந்த தேர்தலுக்கும் தயாராக உள்ளது என்றும் 024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை இத்தேர்தலுக்கு பயன்படுத்த முடியும் எனவும் , எனவும் தெரிவித்தார்.