ரஷ்ய - உக்ரைன் யுத்தத்தில் இலங்கை இராணுவத்தினர் 17 பேர் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ரஷ்ய - உக்ரைன் யுத்தத்தில் இலங்கை இராணுவத்தினர் 17 பேர் பலி!

ரஷ்ய உக்ரைன் யுத்தத்தில் இணைந்து கொள்வதற்காக இந்த நாட்டை விட்டு வெளியேறிய ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினரில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தீவுத்திடலுக்கு வந்தடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  போரில் ஈடுபட்ட 121 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி வலேபொட மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 8 அரச அதிகாரிகள், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அண்மையில் நாடளாவிய ரீதியில் சென்றிருந்தனர். 

 அங்கு ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் இலங்கைக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!