பொது வேட்பாளர் விடயம் தொடர்பான கலந்துரையாடல்!
#SriLanka
#Vavuniya
Mayoorikka
1 year ago

தமிழ்தேசிய கட்சிகளுக்கும் சிவில் அமைப்புக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.
எதிர்வரும் ஜனாபதித்தேர்தலில் தமிழ்பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயம் தொடர்பாக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,சி.வி.விக்கினேஸ்வரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,என்.சிறிகாந்தா,ஜனநாயக போராளிகள் கட்சியின் பேச்சாளர் க.துளசி, தமிழ்தேசிய பசுமை இயக்கத்தை சேர்ந்த பொ.ஜங்கரநேசன், மற்றும் சிவில் அமைப்புக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



