பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார திடீரென கைது!
#SriLanka
#Arrest
Mayoorikka
1 year ago
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கருவலகஸ்வெவ 07 ஆம் தூண் மீ ஓயாவிற்கு அருகிலுள்ள அலிமங்கட பிரதேசத்தில் அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.