ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 30 சீன பிரஜைகள் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 30 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இணையம் ஊடாக நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நேற்று (28.06) வரை ஆன்லைனில் பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் 137 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து பல மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.