இலங்கைக்கு வரும் அமெரிக்க திறைசேரி உதவி செயலாளர்!

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத்தின் இலங்கைக்கான விஜயம் குறித்து அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ரொபர்ட், அரச அதிகாரிகள், நிதித்துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
ரொபர்ட் கப்ரோத்தின் விஜயம் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான நட்புறவையும் ஆதரவையும் எடுத்துக்காட்டுகின்றது.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பொருளாதாரம், நிதித் துறைகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் ஆழமான சீர்திருத்தங்கள் இன்றியமையாததாகும் என குறிப்பிட்டுள்ளார்.



