போலி நாணயத்தாள்களை அச்சிட்ட மூவர் கைது!

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட மூன்று சந்தேக நபர்களை தம்புத்தேகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
500 ரூபா போலி நாணயத்தாள்கள் 06 வைத்திருந்த நொச்சியாகம, உடுநுவர கொலனியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் கடந்த 25ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, போலி நாணயத்தாள்களை அச்சிட்டு, போலி நாணயத்தாள்களை வைத்திருந்த மேலும் மூன்று சந்தேகநபர்கள் நேற்று (26.06) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 08 போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் 149, போலி 500 ரூபா நாணயத்தாள்கள் 149 மற்றும் போலி நாணயத்தை அச்சிட பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் பிரிண்டர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17, 49 மற்றும் 54 வயதுடைய ஹெட்டிபொல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



