அமைச்சர் பவித்ராவின் வர்த்தமானிக்கு தடை உத்தரவு!
#SriLanka
#Minister
Mayoorikka
1 year ago

வில்பத்துவை அண்மித்துள்ள விடத்தல்தீவு வனத்தின் ஒரு பகுதியினை இறால் வளர்ப்புக்கு ஒதுக்கி வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக அமுல்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்ய அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமுலில் இருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



