உயிருடன் பிடித்து செல்லப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும்: தம்பிலுவில் உறவுகள் போராட்டம்
#SriLanka
#Protest
#Ampara
Mayoorikka
1 year ago

அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டமானது இன்றையதினம் தம்பிலுவில் மத்திய சந்தையில் இடம்பெற்றது.
இவ் போராட்டமானது அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் குறித்த போராட்டமானது நாட்டில் உள்ள எட்டு மாவட்டகளில் இடம்பெறவுள்ளதுடன் இன்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசி முன்று நாட்களும் இலங்கையில் உள்ள எட்டு மாவட்டகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் இவ் போராட்டத்தில் எம் பிள்ளைகள் எங்கே மற்றும் குழந்தைகளை தேடி நீதி கேட்ட எங்கள் உயிர்கள் மாய்கின்றது Omp TRC வேண்டாம் உயிருடன் பிடித்து செல்லப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும் என்று இவ் போராட்டத்தில் கோரிநின்றனர்.



