அதானி நிறுவனத்தின் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்தில் நிதி மோசடி!

இந்தியாவின் அதானி நிறுவனம் முன்னெடுத்துள்ள மின் உற்பத்தி திட்டங்களில் பாரிய நிதிமோசடி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.
மன்னார் பூநகரியில் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானி கிறீன்ஸ் எனேர்ஜி நிறுவனத்திற்குஅரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையின் வலுசக்தி துறையின் காற்று வலுசக்திதுறையை ஜனாதிபதியும் அமைச்சர் காஞ்சனவிஜயசேகரவும் இந்திய நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதால் பாரிய அளவிலான நிதிமோசடி இடம்பெறுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அதானி கிறீன்ஸ் எனர்ஜி நிறுவனம் மூலம் மன்னார் மற்றும்பூநகரியில் காற்றாலை காற்றாலை மின்நிலையங்களை உருவாக்க முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை ஒருகிலோவோட்டிற்கு என்ற அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தினை கேள்விப்பத்திரத்தை கோராமல் இந்திய நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர் என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றஉறுப்பினர் இதன் காரணமாக 20 வருடங்களில் இலங்கை பல மில்லியன் டொலர்களை இழக்கவேண்டியநிலையேற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வின்ட்போர்ஸ் என்ற நிறுவனம் காற்றுமின்சக்தி நிலையத்தை உருவாக்க முன்வந்தது அந்த நிலையம் அதானி நிறுவனத்தை விட அதிக விலையை வழங்க முன்வந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேள்விப்பத்திர முறைகள் மூலம் இந்த நிறுவனத்திற்கு 50 மெகாவோட் காற்றுமின்சக்தி நிலையத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை அனுமதிவழங்கியுள்ளது.என அவர் தெரிவித்துள்ளார்.



