பின்லாந்தில் பிரபல யூடியூப்பரான இலங்கைப் பெண் படுகொலை!

#SriLanka #Murder #pinland
Mayoorikka
1 year ago
பின்லாந்தில்  பிரபல யூடியூப்பரான இலங்கைப் பெண் படுகொலை!

பின்லாந்தில் பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த இலங்கை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

 இலங்கையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 உயிரிழந்த பெண் தனது குடும்பத்துடன் நீண்ட காலமாக பின்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அயலவர், வீட்டின் கதவுக்கு அருகில் இரத்தக்கறை இருப்பதை முதலில் கண்டதாக கூறப்படுகிறது.

 பின்னர் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டதாகவும், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!