சர்வதேச அளவில் இலங்கையின் உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளமை ஒரு மைல்கல்! ஜப்பான்

#SriLanka #Japan
Mayoorikka
1 year ago
சர்வதேச அளவில் இலங்கையின் உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளமை ஒரு மைல்கல்!  ஜப்பான்

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தியா ஜப்பான் பிரான்ஸ் தலைமையிலான உத்தியோகபூர்வ கடன்வழங்குநர் குழுவிற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை ஜப்பான் வரவேற்றுள்ளது.

 2023 இல் உத்தியோகபூர்வ கடன்வழங்குநர் குழு ஓசிசியை ஆரம்பித்துவைத்ததன் மூலம் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஜப்பான் பிரதான தலைமைத்துவத்தை வழங்கியிருந்தது.

 பரிஸ்கிளப் நாடுகள் பரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்காத நாடுகளிற்கு இடையில் நடுத்தரவருமானம் பெறும் நாடுகளின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் ஒருங்கிணைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட உலகின் முதலாவது குழு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த கட்டமைப்பின் கீழ் இலங்கையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை இறுதிசெய்துள்ளமை ஒருமைல் சாதனை என ஜப்பானின் நிதியமைச்சர் சுஜிகி சுனிச்சி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நடுத்தரவருமானம் பெறும் நாடுகளின் கடன்மறுசீரமைப்பிற்கான ஒரு உதாரணமாக இது விளங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 உத்தியோகபூர்வ கடன்வழங்குநர் குழுவிற்கு வெளியே உள்ள இருதரப்பு கடன்வழங்குநர்களுடன் தனியார் கடன்வழங்குநர்களுடன் இலங்கை கடன்மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ள அவர் வெளிப்படையான ஒப்பிடக்கூடிய விதத்தில் இதனை இலங்கை முன்னெடுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!