விசர் நாய் கடித்து நான்கு வயது சிறுமி உயிரிழப்பு!
#SriLanka
#Dog
Mayoorikka
1 year ago
விசர் நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது. நான்கு வயதாக குறித்த சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.