வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு குடிபோதையில் வாகனம் செலுத்துவதே காரணம் : பொலிஸார்!

இலங்கையில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களில் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் சாரதிகளே என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீதி விபத்துக்களினால் நாளாந்தம் சுமார் 7 பேர் உயிரிழப்பதாக போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், "இலங்கையில் வருடாந்தம் விபத்துக்களில் 12,000 பேர் இறக்கின்றனர். அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் வீதி விபத்துக்கள்.
இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 7 அல்லது 8 பேர் விபத்துக்களில் இறக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் பயணிப்பவர்கள்.
இலங்கையில் 18-28 வயதுடைய இளைஞர்கள் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.
வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு குடிபோதையில் வாகனம் செலுத்துவதே பிரதான காரணம் என பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட குறிப்பிட்டுள்ளார்.



