நாடாளாவிய ரீதியில் சோதனைக்கு உட்படுத்தப்படும் கேன்டீன்கள்!

பள்ளி மற்றும் மருத்துவமனை கேன்டீன்களில் வழங்கப்படும் உணவின் தரம் தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிட்டதைத் தொடர்ந்து பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHIக்கள்) நாடு முழுவதும் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள PHI ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன, வழங்கப்படும் உணவின் தரம் பற்றிய பல குறைகளை எடுத்துக் காட்டினார். "குறைந்த உணவு தரத்தை மேற்கோள் காட்டி தாங்கள் அதிகளவிலான புகார்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பள்ளி கேண்டீன் கொள்கை வழிகாட்டுதல்களின் கீழ், வறுத்த, அதிக சர்க்கரை, அதிக உப்பு மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை கட்டுப்படுத்தவும், அத்துடன் நொறுக்குத் தீனிகளை அகற்றவும் கேண்டீன்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மேலும், கேன்டீன்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் இருந்தால் 0112112718 என்ற எண்ணில் நேரடியாக புகார் அளிக்குமாறு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.



