இலங்கையில் மூடப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் : யாருடைய தவறு?

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இலங்கையில் மூடப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் : யாருடைய தவறு?

சம்பள முரண்பாடுகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று(26.06) முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக குறைந்தது 10,026 அரச பாடசாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைகள், பரீட்சை வினாத்தாள் திருத்த கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

 தொடர் வேலைநிறுத்தத்தால் பள்ளிக்கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டிய அவர், இதனால் 10 ஆயிரம் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை போராட்டத்தின்போதான அரசின் மிலேச்சத்தனமான அடக்குமுறைகளை கண்டித்து நாளைய தினம் (27.06) சுகவீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!