ஆசிரியர்களினால் கொழும்பில் பெரும் பதற்றம்: பொலிஸார் குவிப்பு

#SriLanka #Colombo #Sri Lanka Teachers #Protest
Mayoorikka
1 year ago
ஆசிரியர்களினால் கொழும்பில் பெரும் பதற்றம்: பொலிஸார் குவிப்பு

இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் பெரும் பதற்றநிலை தோன்றியுள்ளது.

 நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி இலங்கை ஆசிரியர் சங்கமானது போராட்டத்தை தொடர்ந்துவரும் நிலையில், பொாலிஸார் போராட்டத்தை கட்டப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்க உறுப்பினர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

 இதேவேளை இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஜோசப் ஸ்டார்லிங், மஹிந்த ஜயசிங்க, அமில சந்தருவன், வாஸ் குணவர்தன, வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர், மயூர சேனாநாயக்க, வணக்கத்துக்குரிய யல்வல பன்னசேகர தேரர், புஞ்சிஹெட்டி, மொஹான் பராக்கிரம வீரசிங்க மற்றும் இவர்களுடனான உறுப்பினர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

images/content-image/2024/06/1719385913.jpg

 இதன்படி, இன்று (26) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கொழும்பின் பிரதான வீதிகளுக்கு தடையை ஏற்படுத்த வேண்டாம் எனவும், நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி, ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றுக்குள் அத்துமீறி நுழையவும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பொறுப்பான ஒரு அரசு அதிகாரியுடன் சட்டப்பூர்வமாக பெற்ற அனுமதியின் அடிப்படையில் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் போராட்டத்தை முன்னெடுக்க கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக பெருமளவிலான அரச பாடசாலைகளில் ஆசிரியர்கள் கூடியுள்ள நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர், சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!