நிவிதிகல பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் படுகாயம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நிவிதிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படகட பகுதியில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்
டிகோவிட்ட வத்த, பாதகட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்திருந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் காலில் காயம் ஏற்பட்டு நிவித்திகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.



