நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள்!

ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் இன்று (26.06) சுகயீன விடுமுறையை அறிவித்து நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்தப்படும் என அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுப்பு தெரிவிப்பதால் பல பாடசாலைகளின் பிள்ளைகளை பாடசாலைக்கு வரவேண்டாம் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர். 

பிள்ளைகளின் இரண்டாம் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதோடு இதன் காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

 இதேவேளை, அரச நிறைவேற்று உத்தியோகத்தர் சங்கப் பிரதிநிதிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில் நடவடிக்கை இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர்  எச்.ஏ.எல்.உதயசிறி தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!