நேபாளத்தில் புத்தரின் மறுபிறவி என ஏமாற்றிய சாமியார் கைது

#Arrest #Buddha #Nepal #Monk #Fraud
Prasu
2 years ago
நேபாளத்தில் புத்தரின் மறுபிறவி என ஏமாற்றிய சாமியார் கைது

2005 ஆம் ஆண்டு ராம் பகதூர் பாம்ஜான் என்ற சிறுவன் நேபாளத்தில் உள்ள அடர்த்தியான காடுகளில் உள்ள ஒரு மரத்தின் கீழ் 10 மாதங்கள் தவம் இருந்தான் என்றும் அந்த சமயத்தில் அந்த சிறுவன் உணவு, தண்ணீர், உறக்கம் என எதுவும் இல்லாமல் இருந்தான் என்று ஆயிரக்கணக்கான மக்கள் நம்புகின்றனர்.

இதன் காரணமாக அந்த சிறுவனை புத்தரின் மறு அவதாரம் என்று பெரும்பாலான மக்கள் நம்ம ஆரம்பித்தனர்.

இந்நிலையில் 33 வயதாகும் ராம் பகதூர் பாம்ஜான் மீது குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக பொக்சோ வழக்கு தொடரப்பட்டது. 

அந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று நேபாள நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இக்குற்றத்திற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4