புன்னைநீராவி கிராமத்தில் நில அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்திய மக்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

புன்னைநீராவி கிராமத்தில் இராணுவ முகாம் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள புன்னைநீராவி கிராமத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணியினை அளவீடு செய்வதற்காக இன்று (24.06) நில அளவைத் திணைக்களத்தினர் சென்றுள்ளனர்.
அத்திணைக்கள உத்தியோகத்தர்களை காணி உரிமையாளர்களில் உதவியுடனும் பிரதேச மக்கள் உதவியுடனும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராஜ் குறித்த அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.



