காத்திருக்கும் நெல்சன் - குறுக்கே வரும் அட்லீ : ஆரவாரிப்பில் தமிழ் சினிமா!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
காத்திருக்கும் நெல்சன் -  குறுக்கே வரும் அட்லீ : ஆரவாரிப்பில் தமிழ் சினிமா!

விஜயை வைத்து தொடர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் படங்களை இயக்கிய அட்லி ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி 1100 கோடி வசூலை சாத்தியம் ஆக்கினார். 

இந்நிலையில் அட்லி அடுத்ததாக விஜயுடன் கூட்டு சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜயின் அரசியல் பிரவேசம் அந்த செய்தியை பொய்யாக்கியது. 

இதற்கிடையில்   சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்க உள்ள படத்தில் சல்மான்கான் மற்றும் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஏற்கனவே அட்லி மற்றும் சல்மான்கான் படம் பண்ணுவது உறுதியான நிலையில், ரஜினிகாந்த்தும் அந்த படத்தில் இணையபோவதாக தகவல்கள் கசிந்துள்ளது இரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  

ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் 2 படத்தை இயக்க காத்துக் கொண்டிருக்கும் நெல்சனுக்கு பேரிடியாக இந்த செய்தி அமைந்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!