ஹிகுராக்கொட விமான நிலையத்தை முழுமையான விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய அனுமதி!

ஹிகுராக்கொட விமான நிலையத்தை முழுமையான விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சராக முன்வைத்த கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஹிகுரக்கொட விமான நிலையத்தின் அபிவிருத்தி தற்போது இலங்கை விமானப்படையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதுடன், சர்வதேச சிவில் விமான சேவை தரங்களுக்கு ஏற்ப அதனை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியமும் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை விமானப்படை, இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை, விமான நிலையங்கள் மற்றும் ஏவியேஷன் லிமிடெட் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மேற்படி விமான நிலையம் மற்றும் அது தொடர்பான பணிகளுக்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.



