பாராளுமன்றத்தின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பாராளுமன்றத்தின் விசேட கூட்டம் 2024 ஜூலை 02 செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கு இணங்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்து பங்குபற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.



