B.H. அப்துல் ஹமீடின் மரண செய்தி : போலி தகவல்களை பரப்பிய விஷமிகள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் B.H. அப்துல் ஹமீட் உயிரிழந்ததாக பொய்யான தகவல் ஒன்று நேற்று (24.06) வெளியாகியிருந்தது.
இந்நிலையில் அவர் நலமாக இருப்பதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொலியில், விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் எதிர்மறையான விடயங்களை பரப்பியிருக்கலாம் எனக் கூறியுள்ளார்.
இறந்து பிழைப்பது தனக்கு மூன்றாவது அனுபவம் எனக் கூறியுள்ள அவர், நான் மரணிக்கவில்லை என்றும், ஊடக தர்மமே மரணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


