இலங்கையை அச்சுறுத்தும் நோய்த் தாக்கம்: இதுவரை ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
1 year ago
இலங்கையை அச்சுறுத்தும் நோய்த் தாக்கம்: இதுவரை ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

நாட்டில் கடந்த மே மாதத்தில் ஓரிரு வாரங்களாக நிலவிய சீரற்ற காலநிலையால் ஆயிரக்கணக்கான மக்கள் இயற்றை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டனர்.

 இயற்கை சீற்றங்கள் சொத்து மற்றும் உயிர் சேதங்களை ஏற்படுத்துவதோடு மாத்திரம் நின்று விடாமல், மக்கள் மத்தியில் நோய்களையும் பரப்பிவிட்டுச் செல்கின்றன. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக டெங்கு நோயைப் போன்றே எலிக்காய்ச்சல் பரவும் வீதமும் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

 கடந்த ஆண்டு முழுவதிலும் சுமார் 9,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டில் ஜனவரி முதல் மே வரையான 5 மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 4,904 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. தற்போது நாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்து வருகிறது. 

டெப்டோஸ்பைரா (Leptospira) என்ற பற்றீரியாவிலிருந்து இந்த நோய் பரவுகிறது. பெரும்பாலும் இந்நோய் எலிகளிடமிருந்து பரவுவதன் காரணமாகவே இது'எலிக்காய்ச்சல்” என அடையாளப்படுத்தப்படுகிறது. எலிகள் மற்றும் எலி இனத்தைச் சேர்ந்த விலங்குகளின் சிறுநீரில் இந்த டெப்டோஸ்பைரா பற்றீரியா உயிர் வாழ்கிறது. அதற்கமைய குறித்த விலங்குகளின் சிறுநீரானது, நீருடன் கலக்கும் சந்தர்ப்பங்களில், அந்நீரை மக்கள் பயன்படுத்தும் போது அவர்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். 

இலங்கையில் இந்த நோயைப் பரப்பும் பிரதான மூலங்களாக எலிகள் காணப்படுகின்றன. இவை தவிர மாடுகள் சில சந்தர்ப்பங்களில் நாய்கள் என்பவற்றிடமிருந்தும் இந்நோய் பரவக் கூடும். மனிதர்களின் உடல்களில் ஏற்கனவே ஏதேனும் வெட்டுக்காயங்கள் அல்லது காயங்கள் காணப்படும் பட்சத்தில் டெப்போஸ்பைரியா பற்றீரியாவுக்கு இலகுவாக மனித உடலுக்குள் செல்ல முடியும். அவ்வாறில்லை எனில் தூய்மையற்ற நீரில் முகத்தை கழுவுதல், வாய் மற்றும் மூக்கு என்பவற்றை கழுவுவதன் மூலமும் இந்த பற்றீரியாவுக்கு உடலுக்குள் செல்லக் கூடும். உலகில் வெப்ப மண்டல அல்லது அரை வெப்ப மண்டல வலயங்களிலேயே எலிக்காய்ச்சல் அதிகளவில் காணப்படுகிறது. அதாவது குறிப்பாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பிரதேசங்கள் என அவற்றை அடையாளப்படுத்தலாம். இலங்கையில் வருடம் முழுவதும் இந்நோய் பதிவாகின்றது. 

 எலிக்காய்ச்சலுக்குள்ளாகும் நோயாளர்கள் பதிவாகுவதற்கென குறிப்பிட்ட காலம் உள்ளது. உதாரணமாக அறுவடை காலங்களில் இந்த நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். அதே போன்று கடும் மழையுடனான காலநிலையின் போதும் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிக்கும். கடந்த ஜனவரியில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக எலிக்காய்ச்சலுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 

இலங்கையில் சராசரியாக வருடத்துக்கு 6,000 பேர் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகின்றனர். எனினும் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 9,000ஆக உயர்வடைந்திருந்தது. ஆனால் இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் (ஜூன் 19 வரை) சுமார் 5,000 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதே போன்று வருடத்துக்கு 100 அல்லது அதற்கும் மேற்பட்டளவில் மரணங்களும் பதிவாகின்றன. 

 நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகின்ற போதிலும், இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, மொனராகலை மற்றும் குருணாகல் உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அதிகளவானோர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்களே அதிகளவில் இந்நோய்க்கு உள்ளாகின்றனர். 

எவ்வாறிருப்பினும் அண்மைக்காலமாக பெண்களும் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகும் வீதம் அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 20 – 60 வயதுக்குட்பட்டவர்களே இந்நோய்க்கு உள்ளாகக் கூடிய அபாயம் அதிகளவில் காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் சிறுவர்களும், முதியோரும் இந்நோய்க்கு உள்ளாகக் கூடிய வாய்ப்பும் உள்ளது. பதிவாகும் நோயாளர்களில் பெருமளவானோர் நெற் பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளாகவோ அல்லது அதனை அண்மித்த தொழில்புரிபவர்களாகவோ உள்ளனர். 

 இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் சுரங்கத் தொழிலில் ஈடுபடுபவர்கள் எலிக்காய்ச்சலுக்குள்ளாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. இவை தவிர பொதுவான நீர்நிலைகளை அண்மித்த தொழிலில் ஈடுபடுபவர்கள், வாய்க்கால் அல்லது கால்வாய் தூய்மைப்படுத்துபவர்கள், மணல் அகழ்பவர்கள் ஆகியோருக்கும் எலிக்காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தோடு சிறிய ஏரிகள் அல்லது ஓடைகளில் மீன் பிடிப்பவர்கள் அல்லது குளிப்பவர்களுக்கும் கூட எலிக்காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. கீரை போன்றவற்றை பறிக்கச் செல்லும் பெண்களுக்கும் இவ்வாறான அபாயம் காணப்படுகிறது. 

சிறுவர்கள் தூய்மையற்ற நீரில் அல்லது வயல் போன்ற விவசாய நிலங்களில் விளையாடும் போது கூட இவ்வாறான அபாயத்தை எதிர்கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளது. அண்மைக்காலமாக எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகிய சிறுவர்களின் எண்ணிக்கையில் கனிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதோடு, சில மரணங்களும் பதிவாகியுள்ளன. 

 இவ்வாறான நிலையில் எவ்வாறு எலிக்காய்ச்சல் ஆபத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோய்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் துஷானி டி பெரேரா இவ்வாறு விளக்கமளிக்கின்றார் : எலிக்காய்ச்சலிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்றக் கூடிய இலகுவான வழிமுறைகள் காணப்படுகின்றன. அவற்றில் பிரதானமானது எலிக்காய்ச்சல் தொடர்பில் தெரிந்து வைத்திருத்தலாகும். சாதாரணமாக காய்ச்சல் ஏற்படும் போது டெங்கு அல்லது பிரிதொரு வைரஸ் தொற்று என்பது எம் அனைவருக்கும் நினைவில் வரும். ஆனால் தற்போது அவ்வாறு காய்ச்சல் ஏற்படும் போது டெப்போஸ்பைரிஸ் அல்லது எலிக்காய்ச்சலாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்றவாறும் சிந்திக்க வேண்டும். காரணம் இந்த கால கட்டத்தில் சகல மாவட்டங்களிலும் மக்கள் விவசாய பயிர் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

 எனவே இவ்வாறான துறைகளிலிருப்போர் அசாதாரணமான காய்ச்சல் ஏற்படும் போது உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய அவசியமாகும். விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு கைகள் அல்லது கால்களில் காயங்கள் காணப்படுமானால் அவற்றுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு அங்கிகளை அணிந்துகொண்டு விவசாயத்தில் ஈடுபடுவதும் அவசியமானதாகும். 

எலிக்காய்ச்சலுக்குள்ளாகி அது தொடர்பான தெளிவின்மையால் வைத்தியாசாலைக்கு செல்லாமல் இருந்தவர்களே உயிரிக்கின்றனர். எனவே கடுமையான காய்ச்சல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் வைத்தியசாலைக்கு செல்வதை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக் கூடாது.

 எலிக்காய்ச்சலுக்கு சிகிச்சை உண்டு. எனவே உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு சென்றால் எலிக்காய்ச்சலுக்கு உள்ளானாலும் மரணத்திலிருந்து தப்ப முடியும். வருடத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் விவசாய நடவடிக்கைகளில் அதாவது அறுவடையில் ஈடுபடுபவர்கள் தமது சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்தினைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்த மருந்துகளை உரிய நேரத்தில் சரியாக எடுத்துக் கொண்டால் எலிக்காய்ச்சலிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என்றார். 

 டெப்டோபைரா (Leptospira) என்ற இந்த பற்றீரியா உலகலாவிய ரீதியில் வியாபித்துள்ள நோயாகும். சராசரியாக உலகலாவிய ரீதியில் 1.03 மில்லியன் மக்கள் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாவதோடு, 58 900 மரணங்களும் பதிவாகின்றன. பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்படும். ஆனால் எப்போதாவது ஒரு சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் இரண்டு நாட்களில் அல்லது 30 நாட்களில் அறிகுறிகள் தென்படக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. 

 காய்ச்சல், உடம்பு உளைச்சல் அல்லது உடல் நோதல், தலைவலி, உடல் களைப்பு, கண் சிவத்தல், வாந்தி, கடும் மஞ்சல் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல், வயிற்று வலி, இருமள், உடலில் அரிப்பு அல்லது படலங்கள் ஏற்படல் என்பன இந்நோய்க்கான அறிகுறிகளாகும். நோய் தீவிர நிலைமையை அடைந்தால் அது சிறுநீரகத்தையும் பாதிக்கும். 

 சிறுநீரகத்திலிருந்து வெளியேற வேண்டியவை வெளியேறாமல் தடைபடும் போது கண் மஞ்சள் நிறமாக மாற்றமடையும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறுநீரகம் செயழிலந்து உயிரிழப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. நோயாளர்களின் அசமந்த போக்கு அல்லது அறியாமை காரணமாக மரணங்கள் பதிவாகும் அதே வேளை, பெரும்பாலானோருக்கு சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நுரையீரல் ஆகிய 3 முக்கிய உறுப்புக்களும் பாதிப்படையும். தாமதமின்றி சிகிச்சை பெற்றுக் கொண்டால் இந்நோயிலிருந்து முற்றாகக் குணமடைய முடியும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!