இழப்பீடுகள் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் தான் வேண்டும்: உறவுகள் போராட்டம்
#Protest
#Kilinochchi
#Missing
Mayoorikka
1 year ago

கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டம் இன்று காலை 10.00 மணியளவில் கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. அரை மணித்தியாலயங்கள் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச விசாரணையை தேவை. இழப்பீடுகள் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற போன்ற கோசங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.



