இலங்கைக்கு மீண்டும் கிடைக்கவுள்ள 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!

உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபையானது இலங்கைக்கான ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் (Faris H. Hadad-Zervos) இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.
“இலங்கையின் சுகாதாரத்துறை(Sri Lanka Health Sector) திறன் சிறப்பாக உள்ளபோதிலும், வளரும் சுகாதார சவால்களுக்குத் தாயாராகும் வகையில் சக்திமயப்படுத்த வேண்டும்.
இந்த நிதியுதவியின் மூலம் மக்களை மையப்படுத்தியதும், உடன் செயலாற்றக்கூடியதுமான சுகாதார சேவையின் முன்னோக்கிய நகர்வை உறுதி செய்ய முடியும்“ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



