கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

#SriLanka #School #strike
Mayoorikka
1 year ago
கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

நாட்டின் சில பிரதேசங்களில் கல்விசாரா ஊழியர்கள் இன்று (24) மற்றும் நாளையும் (25) சுகயீன விடுமுறையை அறிவித்து சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 இதன்படி கண்டி மாவட்டத்திலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இன்று இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 கல்விசாரா சேவைக்கான தேசிய கொள்கையை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்கம் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்தார்.

 இதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதி நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிபர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பொசன் விடுமுறைக்கு பின்னர் இன்று முதல் அரசாங்க பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு நேற்று விசேட அறிவிப்பை வௌியிட்டிருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!