சமுர்த்திப் பயனாளிகளுக்கு மூன்று மடங்கு நிவாரணம்! அரசாங்கத்தின் அறிவிப்பு

#SriLanka #government
Mayoorikka
1 year ago
சமுர்த்திப் பயனாளிகளுக்கு மூன்று மடங்கு நிவாரணம்! அரசாங்கத்தின் அறிவிப்பு

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பல நன்மைகளை வழங்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

 காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அதில், மக்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கும் திட்டம் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

 அஸ்வசும திட்டத்தின் கீழ் அனைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களும் நன்மைகளைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

 இது சமுர்த்தி மானியத்தின் மூன்று மடங்கு நன்மைகளைக் கொண்டுள்ளது. சகல துறைகளையும் உள்ளடக்கிய அபிவிருத்தி திட்டங்கள் தற்போது நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!