நாளைய தினம் பாடசாலை நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#School
#School Student
Mayoorikka
1 year ago

நாளை (24ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
கல்வி சாரா ஊழியர்கள் நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கல்வி மற்றும் கல்விசாரா சேவையிடம் தேசிய கொள்கையை தயாரிக்குமாறு கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையிலேயே நாளை (24ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



