பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்கிய ஆர்மீனியா

#Country #Palestine #Armenia
Prasu
2 years ago
பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்கிய ஆர்மீனியா

பாலஸ்தீனத்தின் காசா, ராபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் கடந்த 9 மாதமாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்துள்ளது.

இந்நிலையில், ஆர்மீனியா நாடும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது.

இதுதொடர்பாக, ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான மோதலை தீர்க்க பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதே தீர்வாகும் என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே ஆகியவை பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

 முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே பாலஸ்தீனம் ஒரு நாடாக செயல்படுவதற்கான தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4