அட்லாண்டிக் கடற்கரையில் 91 அகதிகளை மீட்ட மொராக்கோ

#Arrest #Refugee #Boat #Navy #Moracco
Prasu
1 year ago
அட்லாண்டிக் கடற்கரையில் 91 அகதிகளை மீட்ட மொராக்கோ

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வேலைவாய்ப்பு தேடி ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். 

அவ்வாறு செல்பவர்கள் அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக சிறிய படகுகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர். 

மேலும் சிலர் மொராக்கோ வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைகின்றனர். இந்த நிலையில் வடமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேனரி தீவுகளை நோக்கி சென்று கொண்டிருந்த படகு ஒன்றை அட்லாண்டிக் கடற்கரை அருகே மொராக்கோ கடற்படையினர் தடுத்து நிறுத்தினர்.

அந்த படகில் சுமார் 91 அகதிகள் இருந்தது தெரியவந்தது. அவர்களை மீட்ட கடற்படையினர் அவர்களை மொராக்கோ காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!