இஸ்ரேல் தாக்குதலில் 10 பாலஸ்தீன பாதுகாப்புப்படை வீரர்கள் பலி

#Death #Attack #Israel #Soldiers #Palestine
Prasu
2 years ago
இஸ்ரேல் தாக்குதலில் 10 பாலஸ்தீன பாதுகாப்புப்படை வீரர்கள் பலி

இஸ்ரேல் ராணுவம் காசாவின் ரஃபா நகர் மீது வான்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் வணிக பொருட்களை பாதுகாத்து வந்த பாதுகாப்புப்படை வீரர்கள் மீது வான்தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்ததாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் உடல்கள் மற்றும் காயம் அடைந்தோர் ஐரோப்பிய காசா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் மேற்கு கரையில் இருந்து காசா முனைக்கு வணிக பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அதிகாரிகள் அனுமதி அளித்திருந்திருந்தனர்.

இதனால் பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன் வணிக பொருட்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள காசா முனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை இதுபோன்று வணிக பொருட்கள் கொண்டு சென்றபோது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 

இந்த நிலையில் 2-வது முறையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேல் தாக்குதலால் 37396 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4